தமிழகத்தில் ஓடும் இரயிலில் இருந்து மர்ம நபர்களால் கீழே தள்ளப்பட்டு உயிர் தப்பிய நபர் சம்பவத்தில், அந்த நபரின் மனைவியே கூலிப்படை ஏவு கொலை செய்ய முயற்சித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை, அரக்கோணத்தில் கடந்த மாதம் 29-ஆம் திகதி ஓடும் இரயிலில் இருந்து கீழே விழுந்ததாக கூறி வாலிபர் ஒருவர் அங்கிருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து மருத்துவர்கள், பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததால், விரைந்து வந்த் பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் போது, அவர் தன்னுடைய பெயர் ராஜேந்திரன்(30) எபவ்ய்ன் அம்பத்தூரில் மெக்கானிக் வேலை செய்து வருவதாகவும், சம்பவ தினத்தன்று நான் முருகன் கோவிலுக்கு செல்வதற்காக ஆவடி இரயில் நிலையத்தில் மின்சார இரயிலில் ஏறினேன்.

இரயில் அரக்கோணம் திருத்தணி இடையே சென்றபோது திடீரென்று அங்கிருந்த 3 பேர் தன்னை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்ததாகவும், இதன் பின்னணியில் என் மனைவி அஸ்வினி இருக்கலாம் என்று கூற, பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் ராஜேந்திரன் மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போது, அஸ்வினிக்கும் அவரது நண்பர்கள் சென்னை செம்பியத்தை சேர்ந்த அனுராக் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகவும், இதை தட்டிக்கேட்ட ராஜேந்தரனை கொல்ல திட்டமிட்டு ஒடும் இரயிலிருந்து கிழே தள்ளி கொலை செய்ய முயன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அஸ்வினி, அனுராக் மற்றும் கமலேஸ்வரன், தினேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த பொலிசார், இவர்களை மத்திய சிறையில் அடைத்தனர்.

Sharing is caring!