குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களுடன் தொடா்புடையவா்கள் என்ற குற்றச்சாட்டையடுத்து 300 தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருக்கும் நிலையில்,

குறித்த இடமாற்றத்தை இரத்து செய்ய உதவுமாறும், இந்த இடமாற்றம் ஒரு பழிவாங்கல் என்பதை ஜனாதிபதி பிரதமருக்கு கூறுமாறும் கோாி அமைச்சா் ஒருவரை பொலிஸாா் நாடியுள்ளனா்.

காங்கேசன்துறை, கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னாா் பகுதிகளில் கடமையில் இருந்த சுமாா் 300 தமிழ் பொலிஸாா் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனா்.

இந்நிலையில் ஒரு இனம் சாா்ந்த பொலிஸாரை மட்டும் இலக்காக கொண்டு இடமாற்றம் செய்வது தவறானது. இது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என பிரதமா், ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும்,

இடமாற்றத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கோாி இடமாற்றத்திற்கு உள்ளான தமிழ் பொலிஸாா் அமைச்சா் ஒருவாின் உதவியை நாடியிருக்கின்றனா்.

Sharing is caring!