போக்குவரத்து ஒழுங்கு விதி முறைகளை முறைப்படி பின்பற்றுமாறும் அவற்றை மீறும் பட்சத்தில் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கிண்ணியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில காலகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

போக்குவரத்து விதி முறைகளுக்கு இணங்க வீதியோரங்களில் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது ஒற்றை, இரட்டை நாட்களை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ஒழுங்கு விதிகளை மீறும் பட்சத்தில் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனை இன்றிலிருந்து கடைப்பிடிக்கவும். குறிப்பாக கிண்ணியா டீ சந்தி முதல் புஹாரியடி குட்டிகராச்சி சந்திவரை இவ்வாறான ஒழுங்குகள் காணப்பட வேண்டும்.

உள் வீதிகளிலாவது தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு பிரதான வீதி ஒழுங்குகளை கடைப்பிடித்து போக்குவரத்து பொலிஸாருக்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Sharing is caring!