இந்திய அரசின் உதவியுடன் தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

தீவக மக்கள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சரினால் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்திய நிதியுதவியுடன் ஆரோ பிளான்ட் திட்டத்தின் ஊடாக தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் குறித்த பிரச்சினையை தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதேவேளை, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறை பிரச்சினைகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த கூட்டத்திற்கு அமைச்சரினால் அழைக்கப்பட்டிருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு அமைச்சரனால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares