கிளிநொச்சி பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில் திருட்டு முயற்சி!

பரந்தன் அஞ்சல் அலுவலகம்

கடந்த 02.06.2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு பூட்டிய தபாலகத்தை மீண்டும் 08.06.2020 இன்று காலை கடமைகளுக்காக திறந்த போதே பாதுகாப்பு பெட்டகம் கோடாரி கொண்டு உடைக்கப்ப ட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் அலுவலகத்தின் பாதுகாப்பு பெட்டகம் கோடாரி மூலம் உடைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பெறுமதியான எந்தப் பொருட்களும் திருடர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை. பரந்தன் தபால் அதிபர் தெரிவித்துள்ளார். அத்தோடு உடைப்பதற்காக பயன்படுத்திய கோடாரியையும் திருடர்கள் விட்டு சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் சாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares