இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரம்க ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் மக்கள் ஏக்கத்தில் உறைந்து போயுள்ளனர்.

அந்தவகையில் தூய தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் பவுணுக்கு 800 ரூபாய் அதிகரித்து 75 ஆயிரத்து 300 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக அதிகரித்துச் செல்வதுடன், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது.

இதன் கரணமாக இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் பவுணுக்கு 3 ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் கடந்த ஆண்டு தங்கத்தின் விலை 74 ஆயிரம் ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரித்தபோது இன்று அதன் விலை 75 ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை!

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜனவரி 3) ஒரு பவுண் (22 கரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 69 ஆயிரத்து 50 ரூபாயாக உள்ள நிலையில் நேற்றையதினம் 68 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல இன்று 24 கரட் தூய தங்கத்தின் விலை 75 ஆயிரத்து 300 ரூபாயாக இருக்கிற நிலையில் நேற்றைய தினம் 74 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!