அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் – அமைச்சர் பந்துல குணவர்தன!

அஞ்சல்துறை பணியார்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை தற்காலிகமாக மூடும் தீர்மானத்தில் மாற்றமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களை தற்காலிக மூடுவதற்கும், மேலதிக கொடுப்பனவை வழங்குவதை தவிர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக. ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

குறித்த விடயங்களை முன்வைத்து, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் பந்துல குணவர்தவுடன் சங்கத்தினர் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை இணக்கமின்றி நிறைவடைந்திருந்தது.

இந்நிலையில், இது குறித்து நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பாரிய நிதி மற்றும் பொருதார பிரச்சினைக்கு மத்தியில், செலவுகளை மட்டுப்படுத்தாவிட்டால், நாட்டை முன்கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்படும் என்பதனால், ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பு செய்யுமாறு அஞ்சல் துறையினரிடம் கோரப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், சனிக்கிழமைகளில் பணியாற்றுதல், மேலதிக கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். குறித்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்றை கைவிட வேண்டும்.

எனவே, சனிக்கிழமைகளில் அஞ்சல் அலுவலகங்களுக்கு விடுமுறை வழங்கி, ஏனைய தினங்களில் மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares