சீரழிக்கும் சீதணம் வேண்டாமே

ஒரு கோடி ரூபா சீதணமாகக் கொடுத்த வீட்டில்
ஒரு நேரமும் உறங்க முடியாது
ஒரு நேரச் சாப்பாட்டையும் சாப்பிட முடியாது

வைத்தியரைத் திருமணம் செய்த பெண்
மன வைத்தியத்துக்கு மருந்தில்லாமலும்
நிம்மதியில்லாமலும்
நோயாளியாகி தற்கொலை செய்யும் பாவப்பட்ட நிலை ஏன்


ஆண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுத்த
தாய்மார் பிள்ளைகளை மறுபடியும் கற்பப் பைக்குள் அனுப்ப வேண்டுமாயின்
மணவறைக்கு அனுப்புவது ஏன்

அழகான இந்த முகத்தை அழுக்காக்கி கொன்றது இந்த சமூகம் சீதணம் எனவும் ஆணாதிக்கம் எனவும் உத்தியோகம் எனவும் வெளிநாட்டு மோகம் எனவும்

உண்மையான அன்பும் அமைதியும் வாழ்வும் இவற்றில் இல்லை என்பதை என்று பெண்கள் உணர்கிறார்களோ அன்றே பெண்கள் விடுதலை பெறுவர் பெண் விடுதலை பெறுகையிலே சமூக தேச விடுதலை அமையும்

Sharing is caring!