நமது கைரேகை சாஸ்திரத்தில் சந்திரமேட்டில் சக்கரம், சூலம், வேல் போன்ற அமைப்புகள் இருந்தால், அவர்களுக்கு கைரேகை பலன்கள் கூறமாட்டார்கள். காரணம் அவ்வாறு கூறினால், சொல்லும் வாக்கு பலிதம் ஆகாது எனப்படுகின்றது.

நவகிரகங்களில் ஐந்து கிரகங்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது ஒரு பாவத்தில் நின்றால், அவர்களுக்கு ஜாதகம் பலிக்காது.

மேலும் ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் ஜோதிடம் பலிக்காது.

ஐந்து அல்லது ஆறு கிரகங்கள் நீசம் பெற்று இருந்தால், வாழ்வில் பிச்சையெடுத்துக் கொண்டு, சாலை ஓரங்களில் சாக்கடை ஒரங்களில் வாழும் நிலை உண்டாகும். இத்தகைய அமைப்பு உள்ளவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது.

லக்னத்துக்கு பாதகாதிபதியின் நட்சத்திர சாரத்தில் 5 அல்லது 6 கிரகங்கள் என்று இருந்தால் வாழ்வில் வறுமை நிலையே நீடிக்கும். இவர்களுக்கும் ஜோதிடம் பலிக்காது எனப்படுகின்றது
பரிகாரம்

ஒவ்வொரு பிரதோஷ தினத்திலும் விரதம் இருந்து, சிவனை வழிபட்டால் மட்டுமே இவற்றிலிருந்து விடுபட முடியும். பிரதோஷ வழிபாடு சகல தோஷத்துக்கு வழிபாடாக இருக்கும்.

Sharing is caring!