இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் வீட்டுக்குள் இறந்து கிடந்த நிலையில் பிரேத பரிசோதனையில் அவர்கள் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்துள்ளது.ஒடிசா மாநிலத்தின் ராஜ்கங்பூரை சேர்ந்தவர் ரஞ்சித் பிரசாத் (35). இவர் மனைவி அல்பனா (30). தம்பதிக்கு 3 வயதில் மகளும், 18 மாத ஆண் குழந்தையும் உள்ளது.

ற்று முன் தினம் வீட்டுக்குள் சடலமாக கிடந்தனர்.தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து நால்வரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொலிசார் கூறுகையில், சடலங்கள் அருகில் பாத்திரத்தில் பால் இருந்ததால் அதில் விஷத்தை கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தம்பதி அதை குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறினர்.இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் நால்வரும் உடலிலும் விஷம் இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் அவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. அதே சமயம் உறுப்புகள் பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதனால் மூச்சுத்திணறி அவர்கள் இறந்தார்கள் என்பது தெரியவரும்.இவர்களின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Sharing is caring!