மன்னாரில் சேதமாக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலைகள்!!

மன்னாரில்..

மன்னார்-யாழ்.பிரதான வீதி,தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன், சில படங்கள் அருகில் உள்ள பற்றை காடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை,குறித்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இவ்விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares