வற்றாத செல்வம் உண்டாக வேண்டுமா? இந்த பரிகாரத்தை செய்திடுங்க

செல்வத்தின் அதிபதி குபேரனும் என நமது சாத்திரங்கள் கூறுகின்றன.

அந்த குபேரனின் அருள் நமக்கு இருக்கும் பட்சத்தில் தாராளமான பணவரவு, அதிக செல்வச் சேர்க்கையும் உண்டாகும் என சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் நமக்கும் வற்றாத செல்வத்தை பெற கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிகாரத்தினை செய்தாலே போதும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.

பரிகாரம் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, குளித்து முடித்து விட்டு தங்களின் வலது உள்ளங்கையில் சிறிது சந்தனம் அல்லது மஞ்சள் பூசிக்கொள்ள வேண்டும்.

அதன் பின் ஒரு ருபாய் அல்லது ஐந்து ருபாய் நாணயத்தை எடுத்து உள்ளங்கையில் வைத்துக் கொண்டு வைத்து அதனுடன் சிறிது வெற்றிவேர் வைத்துக் கொள்ள வேண்டும்.

உள்ளங்கையைக் உங்கள் வாய்க்கருகே கொண்டு சென்று “ஓம் குபேர லட்சுமியாய நம” என்கிற மந்திரத்தை குபேரனை மனதில் தியானித்தவாறே உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்துவர வேண்டும்.

இவ்வாறு பூஜை செய்து முடித்த பிறகு கையில் வைத்திருந்த அந்த சில்லறை நாணயத்தை உங்களின் அன்றைய தின பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ள வேண்டும்.

மறுநாள் இந்த பூஜைக்கு புது நாணயத்தையும் புது வெற்றிவேரின் சிறு துண்டு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திர உச்சாடணம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை முறையை தினமும் அதிகாலை 5.30 மணிக்குள்ளாக செய்வதால் மிக விரைவில் பலன் அளிக்கக்கூடும்.

தொடர்ந்து நாணயங்கள் வைத்து குபேர லட்சுமி மந்திரம் துதித்து பூஜை செய்பவர்களுக்கு வெளியில் பணம் ஈட்டுவதற்கான பணிகளில் ஈடுபடும் போது அதிக அளவு தனவரவு உண்டாகும்.

வேறு வழிகள் தங்களுக்கு வற்றாத பண வரவு ஏற்பட விரும்பும் பெண்கள் எப்போதும் தங்கள் கைகளில் மருதாணி அல்லது மஞ்சள் பூசி கொள்வதால் அவர்களுக்கு பணப்பற்றாக்குறை ஏற்படாமல் செல்வம் மகளான மகாலட்சுமி அருள் புரிவாள்.

சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு ஏற்படும். தாங்கள் சேமிக்கின்ற தொகை சிறிய அளவாக இருந்தாலும் தேவையற்ற விரயங்கள் ஏற்படாமல் செல்வ சேர்க்கை அதிகரிக்கும்.

வீட்டில் பணம் எப்போதும் குறையாத நிலையை உண்டாக்கும். பல்வேறு வகைகளில் பொருளீட்டும் வாய்ப்புகள் ஏற்படும்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares