இருதய அடைப்பு,இரத்த குழாய் அடைப்பு நீங்க,இருதய படபடப்பு,பயம்,பதட்டம் நீங்க

கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு என்பது பிசுபிசுப்பான ஒரு பொருள். இது இரத்தக் குழாய்களில் படிந்து தேங்க ஆரம்பித்தால், அதன் விளைவாக உயிரையே இழக்க நேரிடும். தற்போது உலகில் பலர் மாரடைப்பால் திடீரென்று இறப்பதற்கு முக்கிய காரணமே கொழுப்புத் தேக்கம் தான். உலகில் ஐந்தில் ஒருவர் சில வகையான இதய நோயால் மரணத்தை சந்திக்கின்றனர்.

ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆரோக்கியமற்ற டயட். பெரும்பாலும், கால்சியம், கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிளேக் போன்றவை தான் தமனிகளில் படியும். தமனிகள் என்பவை இதயத்திலிருந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை உடலின் திசுக்களுக்கு வழங்கும் இரத்த குழாய்கள் ஆகும்.

இதயத்திற்கும் மூளைக்கும் ரத்தம் மற்றும் தேவையானசத்துக்களை கொண்டு செல்லும் ரத்த நாளங்கள் இதயத்தை போலவேசுருங்கி விரியும் தன்மை உடையது. அதனால்தான் அவற்றில் ரத்தஓட்டம் நடைபெறுகிறது.

ரத்தக் குழாய்கள் சுருங்கி விரிய நைட்ரிக் ஆக்சைடு என்ற ரசாயன பொருள் உதவுகிறது.நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தி குறையும்போது ரத்த குழாய் சுருங்கிவிரிவது குறையும். அப்பொழுது ரத்த குழாய்களில் கொழுப்பு படியதொடங்கும்.

கொழுப்பு சேர்ந்து குழாயை அடைத்துவிடும். இதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படகாரணமாகிறது.ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் எல்லா அடைப்புகளும் நீக்கி விடலாம்.அதைப்பற்றித்தான் கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகின்றோம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares