வைட்டமின் குறைபாடு காட்டும் அறிகுறிகள்

மனித உடல் ஒவ்வொரு சமயமும் உடலினுள் ஏதேனும் தவறாக நடந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை சரியாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடலினுள் ஏற்படும் அபாயங்களையும், கோளாறுகளையும் தடுக்கலாம்.

இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒருவரது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்காமல் போகிறது.

மேலும் தற்போதைய மார்டன் டயட், பலருக்கும் வைட்டமின் குறைபாட்டினை உண்டாக்குகிறது. சரி, ஒருவரது உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும் என தெரியுமா? வைட்டமின் குறைபாடு உள்ள உடலில் தான் நோய்கள் எளிதில் புகுந்துவிடும்.

இதனால் தான் இன்று ஏராளமானோர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். ஏனெனில் வைட்டமின்களானது உடலினுள் ஒவ்வொரு சிறிய செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின்களின் அளவு குறைவும் போது, உடலானது நமக்கு அந்த குறைபாட்டை ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும்.

இந்த வீடியோவில், ஒருவரது உடலில் வைட்டமின்கள் குறைவாக இருந்தால், நம் உடல் நமக்கு வெளிக்காட்டும் சில அறிகுறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது வைட்டமின் குறைபாடு இருந்தால் வெளிப்படும் சில பொதுவான அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares