சூப்பர் ஸ்டார் ரஜினி கேட்டும் மறுத்த பெப்ஸி உமா… இதுவரை தெரியாத ர கசியம்..!

பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்களே இருக்க முடியாது. அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே அதைப் பார்த்தவர்கள் அதிகம். பல டிவி சீரியல் வாய்ப்பும், ஹீரோயின் வாய்ப்பும் கூட தேடி வந்தபோதும் அந்த நிகழ்ச்சியை மட்டுமே நடத்திக் கொண்டிருந்தார் பெப்ஸி உமா.

தீனா படத்தில் அஜித்குமாரிடம் பெப்ஸி உமா பேசுவது போல் நடித்து லைலா கலாய்ப்பார். அந்த அளவுக்கு பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி தமிழர்களின் நாடி, நரம்போடு இரண்டறக் கலந்த நிகழ்ச்சியாகும். சினிமா நடிகைகளை மிஞ்சும் அழகு, செம அழகான வண்ண, வண்ணப்புடவை, என வசீகரிக்கும் பெப்சி உமாவை இப்போதும் கூட நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் அவர் சிக்கவே இல்லை. இப்போது பெப்சி உமா பிரபல கம்பெனி ஒன்றில் நிர்வாக இயக்குனராக உள்ளார்.

இந்நிலையில் நீண்டகாலத்துக்குப்பின்பு இப்போது பெப்ஸி உமா குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்று வெலிவந்துள்ளது. இதுகுறித்து அண்மையில் மனம் திறந்திருக்கும் பெப்ஸி உமா, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் படத்தில் நடிக்கக் கேட்டாராம். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை. அதேபோல் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தன்படத்தில் நடிக்க அரைமணிநேரம் பேசினாராம். ஆனாலும் தான் சம்மதிக்கவில்லை.’எனக் கூறியுள்ளார்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares