செடியை தாக்கும் மாவுப்பூச்சியை விரட்ட இயற்கை வழிகள்.

வீட்டுத் தோட்டத்தில் செடி, கொடிகளில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் மாவுப்பூச்சியை எந்த ரசாயனங்களும் இன்றி இயற்கையாகவே எப்படி விரட்டுவது என்பது பற்றி பார்க்க போகிறோம். கோடை காலம் என்ற ஒன்று ஆரம்பித்து விட்டாலே தோட்டங்களில் நண்பனைப்போல் பாதிப்பை ஏற்படுத்த வந்து விடும் இந்த மாவுப்பூச்சி, இந்த மாவு பூச்சிக்கு கள்ளிப் பூச்சி, வெல்லம் பூச்சி, பஞ்சு பூச்சி, என்று பல பெயர்கள் உள்ளது

இந்த மாவுப்பூச்சியை தோட்டத்தில் கட்டுப்படுத்துவது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. இந்த மாவுப்பூச்சியை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக இருப்பதனால் சிலர் தோட்டம் செய்வதையே விட்டு விடுகின்றார்கள் ஆனால் இந்த பூச்சியை அழிப்பதற்கு மிக இலகுவான ஒரு தொழில்நுட்பத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த மாவுப் பூச்சியின் வாழ்க்கை முறையை பற்றி தெரிந்தாலே இந்த பூச்சியை நமது தோட்டத்தில் இருந்து இலகுவாக கட்டுப்படுத்தலாம். இயற்கை முறையில் நாம் இதை செய்யும்போது இந்த மாவுப்பூச்சியை இனி செடி, கொடிகளை தாக்காதவாறு கட்டுப்படுத்தலாம் எனினும் இதை அழிக்க முடியாது.

முதலில் மாவுப்பூச்சி பற்றி பார்ப்போம். இந்த மாவுப் பூச்சியானது வெளிநாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது இதனால் தான் என்னவோ தெரியவில்லை இந்த பூச்சியை நாம் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கிறது . இந்த பூச்சிகளின் மேலே இருக்கும் ஒரு வகையான மாவுதான் இதற்கு பாதுகாப்பு அரணாக இருக்கின்றது எனவேதான் இதை நாம் இலகுவாக அழிக்க முடிவதில்லை. இந்த பூச்சியானது தண்டு இலைகளில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழக்கூடியது மேலும் இது தன்னை விட 80 மடங்கு சாறை உறிஞ்சி வாழக்கூடியது. இந்த மாவுப் பூச்சியானது செடிகளில் இலையின் அடியில் தான் அதிகமாக இருக்கும்.

இந்த மாவுப் பூச்சியானது சாறுகளை உறிஞ்சி வெளியே தள்ளும் கழிவுகள் ஒருவித கருப்பு நிறமாக மாறி செடிகளில் பூஞ்சணத்தை உருவாக்கி செடிக்கு ஒளிச்சேர்க்கை நடக்காமல் தடுத்து விடும். மேலும் செடி வளர்ச்சி குன்றி பாதிக்கப்படும். இது வெறும் 17 நாட்களே உயிர் வாழக்கூடிய பூச்சி, ஆனால் இது வாழும் நாட்களில் முன்னூறு தொடக்கம் நானூறு முட்டை வரை விடக்கூடியது. இது கூட்டமாக வாழக்கூடிய ஒரு பூச்சி வகையாகும் இதை செடி முழுவதும் பரப்பி அதிகப்படுத்துவது எறும்புகள் தான். எனவே பட்டைத்தூள், மஞ்சள் பொடி போன்றவற்றை போட்டு முதலில் எறும்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மாவுப்பூச்சியை கட்டுப்படுத்தும் சில முறையைப் பார்ப்போம்.

சாதம் கரைந்த நீர் முதலில் ஒரு பாட்டில் ஒன்றை எடுத்து அதில் அரை லிட்டர் நீரை எடுத்துக் கொள்ளவும். பின்னர் வடிச்ச சாதம் 50 கிராம் (பழைய சாதம் அல்லது புதிய சாதம்) எடுத்து பாட்டிலில் உள்ள நீருடன் கலந்து ஒரு நிழலான இடத்தில் ஒரு வாரத்திற்கு வைக்கவும். தினமும் ஒன்று அல்லது இரண்டு தடவை பாட்டிலை குலுக்கி விடுங்கள். பின்னர் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் இந்த சாதம் கரைந்த நீரை எடுத்து செடியில் மாவு பூச்சி இருக்கும் பகுதிகளில் தெளிக்கவேண்டும். இதைத் தொடர்ந்து 3 – 4 நாட்கள் மாவு பூச்சிகளின் மீது தெளித்து வர அதன் பாதுகாப்பு அரண் செயலிழந்து செடியை விட்டு விரட்டிவிடலாம்.

வேப்பெண்ணெய் கரைசல் தோட்டத்திலிருந்து மாவு பூச்சிகளை விரட்டுவதற்கு மற்றுமொரு அருமையான வழிதான் வேப்பெண்ணையை நீரில் கரைத்து தெளிதல். வேப்பெண்ணையில் உள்ள கசப்புத் தன்மையானது மாவு பூச்சியின் இனத்தை பெருக்க முடியாமல் செடிகளிலிருந்து உதிர்ந்துவிடும். வேப்பெண்ணையை நீரில் நேரடியாக கரைத்து தெளிக்க முடியாது எனவே இதனுடன் சிறிது சோப்பு நீரையும் சேர்க்க வேண்டும்.

செய்முறை: ஒரு லிட்டர் நீருக்கு 5 மில்லி வேப்ப எண்ணெயுடன், ஒன்று அல்லது இரண்டு துணி சோப்பு நீரை நன்றாக கலந்து தெளிக்கவேண்டும்.

இங்கு சோப்பு நீரானது வேப்பெண்ணையை சாதாரண நீரில் கரைப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது. ரசாயனம் கலந்த சோப்பு நீரை செடிகளுக்கு பயன்படுத்தலாமா என்ற ஒரு சந்தேகம் உங்களிடையே ஏற்படும். சாதாரண சோப்புகளில் குறைவான ரசாயனங்களையே பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருப்பதால் இது செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது மேலும் இது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறே தயாரிக்கப்பட்டுள்ளது இதை தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்தி இல்லாதவர்கள் தாராளமாக காதி சோப்பை பயன்படுத்தி வேப்பெண்ணையை கரைக்க முடியும்.

இயற்கையைப் பொறுத்த வரையில் பூச்சிகளை விரட்டக் கூடிய தன்மை தான் அதிகம் உள்ளது எனவே இந்த வேப்பெண்ணை கரைசலை தொடர்ச்சியாக ஒரு தடவைக்கு இரண்டு தடவை அல்லது மூன்று தடவை என இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளியில் செடிகள் முழுவதும் நனையுமாறு தெளித்தது வந்தால் நாளடைவில் நல்ல பலனைக்காணலாம். மேலும் இது மாவுப்பூச்சி மட்டுமில்லாமல் அனைத்து பூசிகையும் விரட்டும் தன்மைகொண்டது.

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளுங்கள், நன்றி.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares