மூல நோயை ஒரே வாரத்தில் குணமாக குப்பைமேனி மற்றும் துத்திக் கீரையை இப்படி சாப்பிடுங்க!

பெரும்பாலும் இந்த மூலநோயினால் பாதிக்கப் படுவது..அதிக பாரம் தூக்குபவர்கள், அதே நேரம் ட்ரைவிங் செய்பவர்கள் தான். கர்ப்பிணி பெண்கள், அதிக நேரம் நின்று வேலை செய்வோரையும் மூல நோய் விட்டு வைப்பதில்லை. ஆரம்பத்தில் பெரிதாக பாதிக்காவிட்டாலும் சில நாட்களிலேயே உயிரை எடுக்க தொடங்கிவிடும். குறிப்பாக வெளி மூலம் இருந்தால் விஷேசங்களுக்கு செல்வதற்கு கூட தயங்குவோம்.

அந்த அளவிற்கு தொல்லை கொடுக்கும். சரி இதற்கான தீர்வு என்ன? வாங்க பார்க்கலாம்.! துத்திக் கீரை..! இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்க கூடிய ஒன்று தான். குறிப்பாக கிராமங்களில் குப்பைமேனி, துத்திக் கீரை போன்றவை தெரு ஓரங்களில் கிடைக்கக் கூடியவை.

இதனுடன் மோர் ஒரு கப் தேவையாகிறது. முதலில் துத்திக் கீரை ஒரு கைபிடி எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒரு கப் மோர் எடுத்து அதில் துத்திக் கீரை பேஸ்ட் ஒரு கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். சுவைக்காக உப்பு சிறிதளவும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மருந்து தயார். இதனை காலையில் குடியுங்கள்.

தொடர்ந்து ஒரு வாரம் குடித்துவர மூல நோய் முற்றிலும் குணமாகிவிடும்.அதே போல் நீங்கள் அரைத்த துத்திக் கீரை பேஸ்ட் மீதமிருந்தால் உங்களுக்கு மலச்சிக்கலால் ஏற்பட்ட ஆசன வாய் புண்களை இந்த பேஸ்ட் நீக்கி விடும். அதனால் சிறிதளவு ஆசன வாயில் பூசி விடுங்கள். அனைத்து பிரைச்சனைகளையும் இந்த ஒற்றைக் கீரை தீர்த்துவிடும்..!

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares