நரம்புத் தளர்ச்சியை நீக்கி உச்சி முதல் பாதம் வரை நரம்புகளை வலுபடுத்தும் சித்த மருத்துவம்

நரம்புத் தளர்ச்சிக்கு சித்த மருத்துவத்தில் எளிமையான தீர்வுகள் இருக்கின்றது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் போதும் ஆண்களுக்கு நரம்புத் தளர்ச்சி எப்போதும் ஏற்படாது.

இன்றைய தலைமுறையினரை அதிகமாக பாதிப்புக்குள்ளாகி வருவது நரம்புத் தளர்ச்சி மட்டும்தான். எழுதும் போதும் கை நடுங்கும், எதை எடுத்தாலும் ஒரு வகையான தடுமாற்றம் மற்றும் மனசோர்வு, தூக்கமில்லாமல் தவிப்பது போன்றவைகளாகும்.

இது போன்ற பாதிப்புகளில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி அழுவதும், சிரிப்பதும் பைத்தியம் பிடித்தது போன்று காணப்படுவார்கள்.

அது போன்றவர்கள் எளிதாக ஜீரணமாகக் கூடிய உணவு வகைகள் மற்றும் காலை உணவுடன் இனிப்பு சிறிதளவு சேர்த்து உண்டு வரலாம். அல்லது தங்களுக்கு பிடித்த இயற்கையான இடங்களுக்கு சென்று வரலாம்.

மேலும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சில உணவு வகைகளை பார்ப்போம்: அமுக்கிராங் கிழங்கு: 500 கிராம் மிளகு: 25 கிராம் சுக்கு: 25 கிராம் அதிமதுரம்: 25 கிராம் ஏலஅரிசி : 25 கிராம் சாதிக்காய்: 25 கிராம் தேன்: 1 லிட்டர் பால்: அரை லிட்டர்.

செய்முறை: அமுக்கிராங் கிழங்கை நன்றாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மண் பானையில் பாலை ஊற்றி, வெள்ளைத் துணியால் பானையின் மேல் போட்டு, இடித்து வைத்துள்ள அமுக்கிராங் கிழங்கு பொடியை துணியின் மேல் உளர்த்தி பானையின் மூடியால் பொடியை மூடி சுமார் அரை மணி நேரத்திற்கு நெருப்பில் அவித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

2 மணி நேரம் நிழலில் உலர்த்தி மீண்டும் இடித்து சலித்துக் கொள்ளவும். மற்ற மருந்துகளை தனித்தனியாக இடித்து சலித்து மேற்கண்ட அளவில் எடுத்துக்கொள்ளவும்.

அனைத்து பொடிகளையும் நன்கு கலக்கிக் கொள்ளவும். தேனை ஒரு பானையில் ஊற்றி மேற்கண்ட பொடிகளை சிறிது சிறிதாகக் போட்டு நன்கு கிளறி கிண்டி வைத்துக்கொள்ளவும்.

சாப்பிடும் முறை:காலை சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் இரவு சாப்பாடு முடித்த பின்னர் ஒரு தேக்கரண்டியும் சாப்பிட்டு விட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வரவும். இதனை 48 நாட்கள் சப்பிட்டு வந்தால் போதும் நரம்புத்தளர்ச்சியில் இருந்து விடுபடலாம்

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares