தினமும் 5 நிமிடம் வெங்காயத்தை கைகளில் தேய்த்தால் என்ன மாற்றம் கிடைக்கும் தெரியுமா?

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால் இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகின்றன.

அந்த வெங்காயத்தை தினமும் காலையில் இரண்டாக வெட்டி அதை சிறிது நேரம் கையில் தேய்த்து வந்தால் என்ன நன்மை கிடைக்கும்ன்னு இப்போ பார்ப்போம்:

தீக்காயம் பட்ட இடத்தில் வெங்காயத்தை வைத்து தேய்த்தால் வலி குறையும். தொற்றுகள் ஏதும் வராது.

முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் வெங்காய சாற்றுடன் சிறிது மஞ்சள் தூளை கலந்து மசாஜ் செய்தால் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பொலிவு பெறும்.

கைகளில் வியர்வை அதிகரிப்பதால் ஏற்படுவதை தடுக்க வெங்காயத்தை தினமும் தேய்ப்பது நல்லது.

பல்வலி உள்ள இடத்தில் சிறு துண்டு வெங்காயத்தை வைத்தால் வலி குறைந்து விடும்.

சிறு பூச்சிகள் கடித்த இடத்தில் வெங்காயத்தை தேய்த்தால் எரிச்சல் இருக்காது.

வெங்காயத்தில் உள்ள ஃபாரிக் ஆசிட் பாதம் வழியே உறிஞ்சப்பட்டு, உடலின் தலை முதல் கால் வரை ரத்தோட்டத்தை சீராக்க உதவுகிறது.

மேலும் தலையில் வழுக்கை விழுந்த இடத்தில் வெங்காயத்தை தினமும் சிறிது நேரம் தேய்த்தால் முடி நன்கு வளரும்.

மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன் பச்சையாக வெங்காயத்தை உட்கொண்டால் மாதவிடாய் வலி குறைந்து விடும்.

வெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும்.

காய்ச்சல் அதிகமாக இருக்கும் போது உங்கள் பாதத்தில் வெங்காயத்தை வைத்தால் காய்ச்சல் சரியாகும்.

சூடான நீரில் நறுக்கிய வெங்காயத் துண்டுகளை போட்டு கொதிக்க வைத்து இரவு படுக்கும் முன் இந்த நீரை அருந்தினால் தொண்டை வலி சரியாகும்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares