இந்த 4 ராசியையும் ஆட்டிப்படைக்க போகும் சந்திர கிரகணம்! எச்சரிக்கை… பேரழிவு நிச்சயம்… என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இதுவரை 2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இரண்டு சந்திர கிரகணங்களும், ஒரு சூரிய கிரகணமும் காணப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் இரண்டாம் பாதி தொடக்கத்தில், அதாவது ஜூலை 5 ஆம் தேதி மற்றொரு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இந்த பெனும்பிரல் சந்திர கிரகணத்தை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது.

பொதுவாக சந்திர கிரகணம் நிகழ்ந்தால், அது ஜோதிடத்தில் உள்ள ராசிகளின் மீது தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில் ஜூலை 5 ஆம் தேதி நிகழவுள்ள சந்திர கிரகணத்தால் மோசமான தாக்கத்தை சந்திக்கவிருக்கும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம். இவர்கள் அலட்சியமாக இருந்தால் பேராபத்து நிச்சயம்.
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சற்று கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். கொரோனா பெருந்தொற்று காலத்தில், சமூக நடவடிக்கைகளை முடிந்தவரை மட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் சுவாச பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம். இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும். எனவே மன ஆரோக்கியத்திலும் கவனத்தை செலுத்த வேண்டியது அவசியம். முக்கியமாக கடந்த காலத்தைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது நல்லது.
துலாம்

ஜூலை 5 ஆம் தேதி நடைபெறவுள்ள பெனும்பிரல் சந்திர கிரகணம், உங்கள் ஜாதகத்தின் மூன்றாம் வீட்டை நேரடியாக பாதிப்பதால், மத செயல்பாட்டில் உங்கள் ஆர்வம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும். தினமும் காலையில் 10-15 நிமிடங்கள் தியானம் செய்ய முயற்சி செய்யுங்கள். முக்கியமாக வாழ்க்கைத் துணையுடன் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
விருச்சிகம்

பெனும்பிரல் சந்திர கிரகணம் விருச்சிக ராசிக்காரர்களின் இரண்டாம் வீட்டில் பாதிப்பதால், இந்த ராசிக்காரர்கள் விபத்துக்களால் ஆரோக்கிய பிரச்சனையை சந்திக்கலாம். நிதி நிலைமை பற்றி பேசுவதானால், பணம் வந்த வேகத்தில் கையை விட்டு போகும். பணியிடத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேண முயற்சி செய்யுங்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு எதிராக திட்டங்களைத் தீட்டலாம். எனவே எப்போதும் கவனமாக இருங்கள்.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள், ஆறு மாதங்களுக்கும் மேலாக சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். உங்கள் பிள்ளைகள் அவர்களது தொழில் மற்றும் வேலையில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும். காதல் செய்பவர்கள், துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares