நாகதோஷம் நம்மை விட்டு விலக செய்ய வேண்டிய பரிகாரம்

தெய்வம் சம்பந்தமாக நம்பிக்கைகள் பக்தர்களுக்கு பல உண்டு. பலவகையான விலங்குகள் இறைவனின் வாகனமாக கருதப்பட்டு அந்த இறைவனுக்குண்டான அதே மரியாதையை அந்த விலங்குகளுக்கும் பக்தர்கள் தருகின்றனர்.

இதில் “நாகப்பாம்பு” அனைவராலும் மிகுந்த பயபக்தியுடன் வணங்கப்படுகிறது. முற்பிறவியிலோ அல்லது இப்பிறவியிலோ பாம்புகளை கொன்றதாலும், துன்புறுத்தியதாலும் “நாக தோஷம்” ஏற்படும்.

இத்தோஷத்தை போக்குவதற்கு சில குறிப்பிட்ட கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்து வந்தால் நல்லது நடக்கும் என்று நம்பப்படுகிறது.

சில பேரால் நினைத்த நேரத்தில் கோவிலுக்கு சென்று வழிபட முடியாத நிலை வீட்டிலேயே நாகதோஷம் நீங்க பூஜை செய்யலாம்.

அமாவாசைக்கு பிறகு வரும் “சஷ்டி” தினத்தன்று வீட்டின் பூஜையறையை நன்கு சுத்தம் செய்து, அரிசி மாவை கொண்டு தரையில் ஏழு நாகங்களின் உருவத்தை கிழக்கு திசையை பார்த்திருக்குமாறு வரைய வேண்டும்.

அப்பாம்புகளின் நீளம் நாக தோஷ பூஜை செய்பவர்களின் கையின் முழு நீள அளவிற்கு இருக்க வேண்டும். பின்பு ஒரு பீடத்தில் வெள்ளை துணி விரித்து, அதன் மீது தேங்காய், பழங்கள், பூக்கள் போன்றவற்றை வைத்து வடக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து நாகராஜர் மந்திரங்களை 27 முறை அல்லது 108 முறை துதித்து வழிபட வேண்டும்.

குழந்தை பேறு கிடைக்க நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்பவர்கள் கஞ்சி வடிக்காத உப்பில்லாத உணவை நாகராஜருக்கு நிவேதனம் செய்யலாம். வழிபட்டு பின்பு அந்த பிரசாதத்தை சாப்பிட வேண்டும். இந்த பூஜை செய்த அன்று இரவு பால் மற்றும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் மிகவும் நல்லது.

வெள்ளி, செம்பு போன்றவற்றில் இருக்கும் நாகராஜ உருவத்தை உள்ளங்கைக்குள் அடங்கும் அளவில் செய்து பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வரலாம். “நாக சதுர்த்தி” போன்ற தினங்களில் விரதம் இருந்து வீட்டில் நாக பூஜை செய்து வழிபட்டு வரலாம். மாலையில் புற்று இருக்கும் கோவிலுக்கு சென்று புற்றிற்கு பால் ஊற்றலாம். இப்படி வழிப்பட்டு வந்தால் நாக தோஷம் நீங்கி சந்தோஷமாக வாழலாம்.

சஷ்டி தினங்களை தவிர்த்து வேற எந்த ஒரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வீட்டில் நாக தோஷ பூஜை செய்து கொள்ளலாம். நாக தோஷ நிவர்த்தி பூஜையை வீட்டில் முறைப்படி செய்து வருபவர்களுக்கு நாக தோஷங்கள், சாபங்கள் போன்றவை நீங்கிவிடும். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணமும், குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தையும் பிறகும் பாக்கியம் உண்டாகும்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares