பற்களில் வலி, மற்றும் சொத்தைப் பல்லை குணப்படுத்தும் அற்புதமான மருத்துவம்..!!

மருத்துவ குணங்கள் நிறைந்த சில உணவு வகைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதன் பலன் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். பெரும்பாலும் நோய்கள் எம்மை தாக்குவதற்கு காரணமே எமது உணவு பழக்க வழக்கங்கள் தான். இன்று நாம் பார்க்கப் போவது கண்டங்கத்தரி என்று சொல்லப் படுகின்ற சிறியவகை கத்தரி பற்றிய மருத்துவ குறிப்பாகும்.

இந்த செடி நிறைந்து முட்கள் காணப் படும் அதனால் இதனை பயன்படுத்தும் போது அவதானமாக செயற்பட வேண்டும். இந்த செடியை வேரோடு பிடுங்கி எடுத்து வந்து கழுவி அப்படியே வெயிலில் காய வைத்து விட வேண்டும். இது நன்றாக காய்ந்ததும் பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இது நாள் பட்ட ஆஸ்துமா, மூச்சுத்தடை போன்றவற்றிக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

இதனை குடி நீரில் ஒரு கரண்டி போட்டு மிக்ஸ் செய்து குடிக்கலாம். 12 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க வேண்டாம். அடுத்து மூட்டு வலி, தலைவலி போன்றவை ஏற்படும் போது இந்த செடியின் இலைகளை பறித்து துணி ஒன்றில் சுற்றி நன்றாக இடித்து அதன் சாறை எடுத்து தலையில் பூசி சில நிமிடம் விட்டால் போதும் தலைவலி பறந்துவிடும்.

அதே போல் மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வர மூட்டு வலி சில நாட்களில் குணமடைந்துவிடும். அதே போல் இதன் காய்களை பறித்து சிறு சிறு ஓட்டைகள் போட்டு நல்லெண்ணையில் போட்டு வறுத்து சாப்பிட்டு வர பல் வலி, பல் கூச்சம், பூச்சி தொல்லை போன்றவற்றை இல்லாமல் போய்விடும்..! இந்த தகவல் பிடித்திருத்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!!

குறிப்பு: கண்டங்கத்தரி காய் உணவில் எடுத்துக் கொள்வது கடினமான ஒன்றாகும். காரணம் அதன் கறை தன்மை. அதனால் சிறிய கத்தரிக்காய் என குறைத்து கணிப்பிட வேண்டாம்.

6 மாதம் அல்லது 1 வருடத்திற்கு ஒரு முறை ஒருவர் நல்லெண்ணையில் வறுத்த 4 கண்டங்கத்தரி காய் சாப்பிடலாம். குடி நீர் செய்வதால் எந்த ஒரு ஆபத்தும் கிடையாது.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares