மகளை நெஞ்சோடு அணைத்தபடி மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்த தந்தை!

சென்னையில் மகளை நெஞ்சோடு அணைத்தபடி மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர் திருப்பதி ரெட்டி (35). இவருடைய மனைவி சுனிதா. இவர்களுக்கு ஹரிஷ் (7) என்ற மகனும் ஹரிகா (5) என்ற மகளும் இருந்தனர்.

திருப்பதி ரெட்டி, பாரிமுனை தனியார் குடோனில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

அவர் சில காலமாக மன அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக, மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை திருப்பதி ரெட்டி வீட்டின், மூன்றாவது தளத்திற்கு மகள் ஹரிகாவுடன் சென்றார். மனைவியும், மகனும், இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில் டிவி நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மகளை துாக்கி, நெஞ்சோடு அணைத்துக் கொண்ட திருப்பதி ரெட்டி கீழே குதித்தார்

இதில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே தந்தை-மகள் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவரின் உடல்களை பார்த்து சுனிதா மற்றும் அவரது உறவினர்கள் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

முதற்கட்ட விசாரணையில், திருப்பதி ரெட்டி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபயணம் சென்றார். ஆனால் பாதியிலேயே வீடு திரும்பி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு அவர், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதையடுத்தே மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்த தற்கொலைக்கான முழு காரணம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares