சாப்பிடும் போது சாதத்தை உருண்டை பிடிக்க கூடாது! கையை ஊன்றி சாப்பிடக்கூடாதென்று சொல்வது ஏன்.?

சோத்த உருண்ட பிடிச்சு சாப்பிடாத, கைய தரையில முட்டு கொடுத்து சாப்பிடாத” இதெல்லாம் தினம் தினம் நான் வீட்டில் கேட்டு கேட்டு சலிச்சுப்போன வார்த்தைகள். விவரம் தெரிந்த நாளில் இருந்து, ஆரம்பத்தில் இப்படியெல்லாம் சொன்னால் கோவம் வரும். இப்போ என்ன காரணத்துக்காக அப்படி சொன்னார்கள் என்று தெரிந்த பின்னர், என்னை மாற்றிக்கொண்டேன். தாத்தா, பாட்டி என்ன சொன்னாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும் என்பதை, இதிலிருந்தே புரிந்து கொண்டேன்.

முதலில் சாப்பிடும் போது கையை தரையில் ஊன்றி சாப்பிட்டால், இரைப்பையும், குடலும் இயல்பாக இல்லாமல் முன்னோக்கி அழுத்தம் கொடுத்து சாய வேண்டியதாகிறது. உடலை தளர்வாக வைத்துக்கொண்டு சாப்பிட்டால் தான், உணவு இலகுவாக இரைப்பைக்குள் சென்று, சீக்கிரம் செரிமானம் நடக்கும். கையை ஊன்றும் போது, அதனால் உண்டாகும் அழுத்தம், உணவு செரிப்பதில் சிக்கலை ஏற்ப்படுத்துமாம். இது தவிர, அந்த காலத்தில் பாதி வீட்டில் சாணியால் மெழுகப்பட்ட தரை தான் இருக்கும் என்பதால், ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிட்டு, ஏதாவது காரணத்திற்காக பாத்திரத்தை தொட்டால், அதில் சாணி முளங்கு துகள்கள் படிந்துவிடும்.

அடுத்து சாப்பாட்டை உருண்டை பிடித்து சாப்பிடாதே என்பார்கள். சின்ன பையனா இருக்கும் போது அதிகம் சாப்பாடு தட்டில் போட்டால் சாப்பிட மாட்டேன் என்பதால், அப்பா சின்ன சின்ன உருண்டையாக பிடித்து கொடுப்பார். அதனை பார்த்து பழகி, சாப்பிடும் போதெல்லாம் உருண்டை பிடித்து சாப்பிடும் பழக்கம் வந்தது. சாதத்தை அப்படி உருண்டை பிடித்து சாப்பிட்டால், பற்களில் அரைபட்டு, உமிழ்நீருடன் கலக்காமல் நேரடியாக இரைப்பைக்கு செல்லும். எந்த உணவாக இருந்தாலும், நாவில் சுரக்கும் உமிழ்நீருடன் கலந்து, உடலுக்குள் சென்றால் தான், செரிமானமாகி சத்துக்கள் உடலில் சேருமாம்.

சாதத்தை உருண்டை பிடித்து சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு பின்னால், ஆன்மீக காரணமும் உண்டு. முன்னோர்களுக்கு தெவசம் வைக்கும் போது, சாதத்தை உருண்டை பிடித்து வைப்பதை பார்த்திருப்போம். அதே போல நாமும் உருண்டை பிடித்து, நாமே சாப்பிடுவது பாவகரமான செயல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares