டக்ளஸ் தேவானந்தாவால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட திட்டத்தை தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் காழ்ப்புணர்ச்சிகாரணமாக பணிகளை தடுத்து நிறுத்திய தேர்தல் திணைக்களம்!

முல்லைத்தீவு வட்டுவாகல் ஆற்றினை ஆழப்படுத்தும் நடவடிக்கை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தேர்தல் விதிமுறை மீறல் என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை தொடர்ந்து அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிலாளர்கள் மத்தியில் வட்டுவாகல் நந்திக்கடல் தேர்தலுக்கு முன்னர் ஆழப்படுத்தப்படுவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதை தொடர்ந்து இன்று ஆழப்படுத்துவதற்காக கனரக இயந்திரம் வட்டுவாகல் ஆற்றுக்குள் இறக்கப்பட்டு அகழப்பட்ட போது உடனடியாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்ளம் சம்பவ இடத்திற்கு வந்து தடுத்து நிறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

வட்டுவாகல் நந்திக்கடல் ஆற்றுப்பகுதியினை ஆழப்படுத்து மாறு கடற்தொழிலாளர்களால் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டு கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் நாரா நிறுவனம் ஊடாக அபிவிருத்தி செய்வதற்காக அமைச்சரவையில் நிதி ஒதுக்கப்பட்ட போதும் அதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில் இன்று தோண்டப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட போது தேர்தல் திணைக்களத்தினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்திய போதும் தேர்தல் காலங்களில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் முடிந்து எதிர்வரும் 07 ஆம் திகதிக்கு பின்னர் குறித்த அபிவிருத்தி பணியினை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் க.காண்டீபன் மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது தேர்தல் திணைக்கள அதிகாரிகள் முறைப்பாட்டு ஆணைக்குழுவினர் பொலிசார் குறித்த இடத்திற்கு பிரசன்னமாகியதுடன் நாரா அமைப்பினரும் குறித்த இடத்தில் இருந்து சென்றுள்ளார்கள். இதுவிடயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபருடன் கடற்தொழிலாளர்கள் பேச்சு நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares