தங்கத்தை கையில் வாங்காமலேயே தங்கத்தில் முதலீடு செய்ய முடியுமா? இந்த உண்மை மக்களுக்கு தெரிந்தால் நகைக்கடைகள் இழுத்துமூடப்படும்!

கொரோனா கிளப்பிவிட்ட பீதியில் தங்கத்தின் விலை, காட்டுத் தனமாக எகிறிக்கொண்டே செல்கிறது. இன்னும் இரண்டு வருடம் கழித்து கல்யாணம் பண்ணப்போறவங்க நிலையை நினைத்தால், இப்பவே கண்ணைக்கட்டுது. இதற்கு ஒரு முடிவே கிடையாதா? குறைவதற்கான வாய்ப்பு இல்லையா? என்று கேட்டால், இப்போதைக்கு அதனை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்கின்றனர் நகை வியாபாரிகள். சரி, நகையில் முதலீடு செய்யலாம் என்று கடைக்கு போனால், செய்கூலி, சேதாரம் என்று சொல்லி ஒரு லிஸ்டை தலையில் கட்டிவிடுகின்றனர். ஒரு பவுன் விலையோடு சேர்த்து, அதற்கு மேல் ஐந்தாயிரம் ரூபாய் வரைக்கும் தண்டம் அழ வேண்டியுள்ளது.

இதே நகையை மூன்று வருடம் கழித்து விற்கலாம் என்று கடைக்கு போனால், அவ்வளவு தேய்ந்துவிட்டது, இவ்வளவு தேய்ந்துவிட்டது என்று சொல்லி, அதிலும் ஒரு தொகை கழித்துவிட்டது போகத்தான் மீதி பணம் கையில் கிடைக்கும். இந்த நேரத்தில் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால், பணத்திற்கு எந்தவித சேதாரமும் இன்றி தங்கத்தில் முதலீடு செய்வதோடு, முதலீடு செய்யும் பணத்திற்கான வட்டியும் பெற முடியும். ஒரு ஐந்து வருடத்திற்கு பிறகு, அன்றைய தங்கத்தின் விலைக்கு ஏற்ப துளியளவு போட்ட காசு குறையாமல், இலாபத்தை எடுக்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. நகையாக தங்கத்தை வாங்காமல், தங்க பத்திரமாக வாங்க வேண்டும். இப்படி செய்யும் போது தங்கம் உங்கள் கையில் நேரடியாக கிடைக்காது. இன்றைக்கு 5000 ரூபாய் ஒரு கிராம் என்றால், அதற்கு நிகராக தங்க பத்திரம் உங்கள் கையில் கொடுக்கப்படும். ஒரு மூன்று வருடம் கழித்து, ஒரு கிராம் தங்கம் 8000 ஆயிரம் ரூபாய் ஆகிறது என்றால், தங்கப்பத்திரத்தை திருப்பி கொடுக்கும் போது, துளியளவு சேதாரம் இன்றி, 8000 ஆயிரம் ரூபாய் பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த இடைப்பட்ட மூன்று வருட காலத்தில், நீங்கள் போட்ட 5000 ரூபாய்கான வட்டியும் கிடைக்கும். இப்படிச்செய்வதால், திருட்டை கண்டு பயப்பட தேவையில்லை. தேய்மானத்தில் எவ்வளவு குறையுமோ என்ற பயமும் இல்லை. அளவுக்கு மீறிய நகை இருந்தால், மேற்கொண்டு நகை வாங்காமல், தங்கப்பத்திரத்தில் முதலீடு செய்வது என்பதே புத்திசாலித்தனமான முடிவாகும். பிறகு என்ன, நகை வாங்கி வாங்கி நகைக்கடையை வளர்ப்பத்தை விடுத்து, முதலீடு செய்து உங்களை பொருளாதார ரீதியாக வளர்த்துக்கொள்ளுங்கள்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares