முன்னோர்களுக்கு திவசம் செய்யும் போது வேகாத எள்ளை வைப்பது ஏன்? காரணம் தெரிந்தால் உங்கள் சந்ததி மீண்டும் உயிர்பெறும்!

எள்ளை சர்வ சாதாரணமாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதன் பிறந்ததில் தொடங்கி, அவனது இறப்பு வரைக்கும் எள் கூடவே பயணிக்குமாம். உலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, இன்று வரைக்கும் நம்மோடு உறவாடிக்கொண்டிருக்கும் எண்ணெய் வித்து எள் மட்டுமே. ஆன்மீகத்திலும் எள்ளுக்கு என்று தனி இடம் உண்டு. இவ்வளவு நாள் என்ன காரணத்திற்காக அப்படி செய்தோம் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இனி என்ன காரணம் என்று தெரிந்து கொண்டு, பிறருக்கும் சொல்ல முயற்சிப்போம்.

காலம் காலமாக முன்னோர்களுக்கு பித்ரு பூஜை நடத்தும் போது, எள் உருண்டை, எள் அன்னபிண்டம் வைத்து வழிபாடு நடத்தியிருப்போம். அதில் நன்றாக உற்று நோக்கினால், அரிசியை மட்டுமே வேக வைப்போம். வேக வைக்காத எள்ளை, அன்னத்துடன் கலந்து அப்படியே திவசம் செய்வோம். அப்படி செய்யும் போது, அது பறவைகளுக்கு உணவாகி, பாவங்கள் மறைந்து, புண்ணியம் நம்மை தேடி வர வழிவகை செய்யும். அந்தப்பலன் இதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை.

நீரில் அன்னதோடு அடித்துச்செல்லப்படும் எள்ளானது, ஏதோ ஒரு மூலையில் படிந்து, வெவ்வேறு இடங்களில் முளைப்பெடுக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் நம் முன்னோர்கள் மீண்டும் உயிர் பெறுகின்றனர் என்ற நம்பிக்கை வழக்கத்தில் உள்ளது. இதெல்லாம் தாண்டி எள் விளக்கு, நல்லெண்ணெய் தீபம், நல்லெண்ணெய் அபிஷேகம் என்று, கடவுளுக்கு உகந்த ஒன்றாக எள் பார்க்கப்படுகிறது. குறிப்பாக சனி பகவானுக்கு ஏற்றது எள் தீபம். இதனை ஏற்றுவதற்கு பின்னால் இன்னொரு விஷேசமும் உள்ளது.

எள் தீபம் ஏற்றும் போது மனம் அமைதியாகும். அதிலிருந்து வெளிப்படும் சாத்வீக குணம் கொண்ட கதிர்வீச்சுகள் மனதுக்கு நன்மை பயக்க கூடியது. வழிபடுவோர் மனதில் உள்ள குழப்பங்கள் எல்லாம் நீங்கி புத்துணர்ச்சி உருவாக்கச்செய்வதோடு, மனதை ஒருநிலைப்படுத்த வைக்கும். இது தவிர, புதிதாக நாற்று நடும்போதும், காது குத்தும் விழாவிலும் எள், பச்சரிசி, வெல்லம் கலந்த காப்பு அரிசி பிரசாதம் எல்லோருக்கும் வழங்கப்படும். இது உடல் உறுதிக்கு தேவையான எல்லா சத்தையும் கொடுக்குமாம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares