இந்த இலையை அடையாளம் கண்டால், உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பல்வலி, மூல நோய் காயங்கள் இருக்காது

அதிசய மூலிகை நாயுருவி, வயல்வெளிகளில், சாலையோரங்களில் என, நாம் காணும் இடங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும். மலைகளில் வளரும் நாயுருவி, பாறைகளை தனது வேரின் மூலம் துளைத்து மேலேறி வளர்வதால், கல்லுருவி என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.எல்லா இடங்களிலும் காணப்படும் இந்தச்செடிகளின் மேல் உள்ள முட்கள் சூழ்ந்த கதிர்கள், ஆடைகளில் ஓட்டும் இயல்புடையதால், யாரும் இதன் அருகில் செல்லமாட்டார்கள்.

ஆனால், நாயுருவி மனிதருக்கு செய்யும் அரும்பெரும் நலன்களை அறிந்தால், உடைகளில் என்ன, உடலில் கூட ஒட்டிக்கொள்ளட்டும் என நினைப்பார்கள். நாயுருவியின் பொதுவான மருத்துவ குணங்கள் சிறுநீரை அதிகரிக்கும், உடல் நலிவைப்போக்கும் மற்றும் உடலையும் மனதையும் பொலிவாக்கும்.

நாயுருவி பேஸ்ட் மற்றும் பிரஷ்: முன்னோர்கள் இன்றுபோல பேஸ்ட் மற்றும் பிரஷ் இல்லாத அந்த காலங்களில், நாயுருவி வேரையே, பிரஷாகவும் பேஸ்டாகவும் பயன்படுத்தி வந்தனர். எதனால் தெரியுமா?நாயுருவி வேர், பற்களின் வெற்றிலைக்கறைகளை நீக்கி, இயல்பான நிறத்தை அடைய வைப்பதுடன், பற்களில் படியும் தொற்றுக்களையும், அழித்து நீக்கிவிடும் தன்மைமிக்கது.

சூடான மற்றும் குளிர் பானங்கள், புகை மற்றும் புலால் தவிர்த்து, நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நாயுருவி வேரில் பல் துலக்கிவர, மனம் தெளிவடைந்து, முகம் பொலிவாகும், பேச்சில் வசீகரம் பிறக்கும் என்கின்றன சித்த நூல்கள்.சில மேஜிக் ஷோக்களில், மேஜிசியன் வாயில் ட்யூப்லைட்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கடித்து, துப்புவதை பார்த்திருப்பீர்கள், அவர்களின் அத்தகைய அதிசயிக்கவைக்கும் திறனுக்கு செந்நாயுருவி இலைகளே காரணம்.

செந்நாயுருவி இலைகள் கண்ணாடிகளை அறுக்கும் தன்மை கொண்டிருப்பதால், அந்த இலைகளை வாயில் நன்கு மென்று வைத்துக்கொண்டே, இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுகின்றனர். மேலும், பாறையையே துளைத்து செல்லும் வலுவுடையது செந்நாயுருவி என்று நாம் இந்தப்பதிவின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்படி பல மருத்துவ குணங்களை கொண்ட செடி மூலம் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் பல்வலி, மூல நோய் காயங்கள் எப்படி சரி செய்யலாம் என்று கீழே உள்ள வீடியோவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் .

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares