தூங்கும் முன் இத செஞ்சா 1 கொசுக் கூட கடிக்காது

நமது வீடுகளில் மாலை வந்தால் போதும் கொசு தொல்லை நம்மை பாடாய்படுத்தும். கொசு விரட்டிகளால் அதிக நோய்கள் வருகின்றன. கொசு விரட்டிகளில் கெமிக்கல் உள்ளதால், இதன் புகையை சுவாசிக்கும்போது பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.கொசுவை இயற்கையான முறைகளில் மூலம் விரட்ட, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை சாம்பிராணியை வாங்கி, அரை மணி நேரம் புகைத்தால் போதும், கொசு வரவே வராது.

பூண்டு:மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களைகொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

ஒரு மண் சட்டியில் பச்சை வேப்பிலை அல்லது நொச்சி இலை புகைக்க விட்டு அதன் மேல் மஞ்சள் பொடியை தூவிவிட்டால் கொசு தொல்லை முழுவதுமாக நீங்கி மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும்.புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் சில கற்பூர வில்லைகளை போட்டு வைத்தால் கொசு எட்டிக்கூட பார்க்காது.

வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பிலை எண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவது தெளிக்கலாம்.

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares