தமிழரின் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கள் முக்கியத்துவம் பெறுகிறது. கள்ளின் மருத்துவப் பயன்களை தெளிவாக பதிவு செய்து சென்றுள்ளனர் சித்தர்கள். சித்தர் பாடல்களின் பல இடங்களில் கள்ளின் மருத்துவ மகத்துவங்களை அறிந்துகொள்ள முடிகிறது.பனை மரத்து கள்ளால் ஆண்களுக்கு உடல் வலிமையையும், விந்து சக்தியும் அதிகரிக்கும் என அகத்தியர் குணப்பாடம் கூறுகிறது. பனை மரத்தின் பால் தெளுவு அல்லது தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். காலையில் வெறும் வயிற்றில் இந்த பாலை100-200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் ஆறிவிடும்.

புளிப்பேறிய கள் மயக்கம் தரும். அறிவை மயக்கும் ஆனால் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினால் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும். பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம். பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.       தமிழகம் முழுவதும், ஏராளமான, “டாஸ்மாக்’ கடைகளை திறந்து, மாதத்திற்கு இவ்வளவு என, இலக்கு நிர்ணயித்து, மதுபானங்களை விற்பனை செய்து வரும் தமிழக அரசு, உடலுக்கு கேடு விளைவிக்காத, கள் விற்பனையை மட்டும் தடை செய்துள்ளது’ என, கள் இயக்கத்தினர், சில ஆண்டுகளாக கூறி வருகின்றனர்.கள் விற்பனை விஷயத்தில், தேர்தலின் போது, வாக்குறுதி அளிக்கும், அரசியல்வாதிகளும், அதன்பின், அதுபற்றி பேசுவதில்லை என்பதும், அவர்களின் மனக்குறை. விவசாயிகளுக்கு சிறந்த வருவாய் தரும், கள் விற்பனையை அனுமதிப்பது சரியா, தவறா என, இரண்டு அரசியல் பிரபலங்கள் முன்வைத்த வாதங்கள் இதோ: “கள் உண்டவனை, உயிரோடு இருக்கும் மனிதனாக நான் கருதமாட்டேன்; அவனை செத்தவனாகவே கருதுவேன்’ என, திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளார். சிலப்பதிகாரத்தில், கோப்பெருந்தேவியின், கால் சிலம்பு காணாமல் போகிறது. கண்ணகியின் சிலம்பை எடுத்துச் சென்ற கோவலனை, திருடனாக கருதி, விசாரணை நடத்திய போது, குடிகார காவலன் ஒருவன், கோவலனை வெட்டி வீழ்த்தி விடுகிறான். கோவலனை வெட்டியதும், கண்ணகிக்கு கோபம் வந்ததால், பாண்டியன் இறக்கிறான்; மதுரை எரிகிறது. இதற்கு காரணம் கள்ளு ஏற்படுத்திய போதை தான். ராமாயணத்தில் சீதை எங்கே இருக்கிறார் என்பதை தேடி கண்டு பிடித்து தருவேன் என, ராமனிடம் சுக்ரீவன் கூறினார். ஆனால், அவர் சொன்ன நேரத்தில் வரவில்லை, கோபத்தில் சுக்ரீவனை கண்டிக்க, லட்சுமணன் புறப்பட்டார், அப்போது, நரவு (கள்) உண்டு மறந்தேன் என, சுக்ரீவன் கூறினார். இப்படி, நேரம் தவறுவதற்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது, கள் போன்ற போதை வஸ்துகள் தான். மகாத்மா காந்தி, ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்த போது, அவர் முன் பெண்கள் தலைவிரி கோலமாக வந்து, “கள் குடித்து, கணவர் துன்புறுத்துகிறார்’ என, கதறி அழுதனர். ஆயுதம் தொடாத காந்தி, கையில் கோடரி எடுத்து, கள் தரும் ஈச்சமரத்தை வெட்டினார். அவ்வளவு மோசமானது கள். பனை மரத்தில் கள் எடுத்தால், மனிதனின் உடலை வளர்க்கிற பதநீர், நுங்கு, கிழங்கு போன்றவை பனை மரத்திலிருந்து கிடைக்காது. இப்படி, பல விதங்களிலும், மனிதனின் அறிவை கள் கெடுக்கிற காரணத்தாலேயே, அதை இறக்க அனுமதிக்கக் கூடாது என, பல காலமாக சொல்லி வருகிறோம். குமரி அனந்தன், தமிழக காங்., முன்னாள் தலைவர்  பல நூறு கோடி ரூபாய் மானியம் கொடுத்து, வெளிநாட்டிலிருந்து, பாமாயில் இறக்குமதி செய்து, மாணவ, மாணவியரின் மதிய உணவுக்கு, தமிழக அரசு வழங்கி வருகிறது. அதேபோல், ரேஷன் கார்டுக்கு, மாதம் ஒரு கிலோ பாமாயில் மானிய விலையில் வழங்கப்படுகிறது. பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெயை அரசு கொள்முதல் செய்து, மதிய உணவுக்கும், ரேஷன் கார்டுக்கும் வழங்கினால், பல லட்சம் தென்னை விவசாயிகள் பயன் அடைவர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்தாமல், அன்னிய நாட்டு பொருட்களை வாங்குவதால், தென்னை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்கப்படுவதில், சுண்ணாம்பு போட்டால் பதநீர். அந்த பதநீரை இரண்டு நாள் புளிக்க வைத்து குடித்தால் அதன் பெயர்கள். ஆனால், சுண்ணாம்பு இல்லாமல், இறக்க கூடியதை, தனி பதநீர் என, அழைப்பர். அதற்கு சுயம்பு என்ற பெயரும் உண்டு. இது மருத்துவ குணம் உடையது. இந்த சுயம்புக்கு தான் தென்னை விவசாயிகள் அனுமதி கேட்கின்றனர். கேரளாவில் பாலக்காடு உட்பட, மூன்று மாவட்டங்களில், தென்னை மரங்களில் இருந்து, நீரா (பதநீர்) இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் மரங்களுக்கு வரி கட்டி, கள் இறக்க அனுமதிக்கப்படுகிறது. கர்நாடாகாவில், கள் இறக்க அனுமதி கிடையாது. ஆனால், கள் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது, கைது நடவடிக்கை எடுப்பதில்லை.தமிழகத்தில் தனி பதநீர் இறக்க, விற்க அனுமதித்தால், பல லட்சம் விவசாயிகள் பயனடைவர். மது பானங்களை குடித்து விட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை, 90 சதவீதம் குறையும். பனைமரம் பூ பூக்கும் தருணத்தில் பனைமரத்தின் உச்சியில் பனையோலைகளுக்கிடையே உருவாகும் குருத்து என்ற விழுதை சரியான முறையில் சீவி, அதனை ஒரு சிறிய மண் பாண்டத்தில் உள்ளிட்டு, மண் பாண்டத்தின் கழுத்துப் பகுதியில் கயிற்றால் கட்டி பின் மரத்துடன் கட்டுவர். அவ்வாறு செய்யும்பொழுது சுரந்த 6 மணி நேரத்திற்கு பின்பு தானாகவே நொதித்து ஆல்கஹால் உற்பத்தியாகும்(நேரம் செல்ல செல்ல 5 சதவீதம் வரை உயரும்). பதநீர் புளிக்கும் பொழுது ஈஸ்ட் என்ற பூசனம் உருவாகிறது அவற்றின் உதவியால் ஆல்கஹால்).மண் பாண்டத்தில் குருத்தில் இருந்து சொட்டு சொட்டாக வடியும் பனை நீரே பனங்கள்ளு ஆகும்.அளவோடு பருகினால் ஆரோக்கியம் உண்டு மற்றும் பதநீரில் உள்ள அனைத்து சத்துக்களும் இவற்றில் உண்டு மேலும் விட்டமீன் பி 6, 12 நிறைய உண்டு. பனங்கள்ளை அதிகமாக அருந்தினால் போதை உண்டாகும். பனங்கள்ளுடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்தால் அதுவே பதநீர் எனும் இனிப்பான பானமாகும். இவை தற்பொழுது தமிழ் நாட்டில் தடை செய்யப்பட்ட பானம் ஆனால் அன்டை மாநிலங்களில் இன்றளவும் உள்ளது.*கள்ளு தடை:-*உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. மதுவென்பது சங்ககாலம் முதல் தமிழர்களின் வரலாற்றில் பிரிக்க முடியாததாக இருந்தாலும் இலைமறை காயாகத்தான் இருந்தது. பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’, குடிக்குரியதுதான்.பனைத் தொழிலுக்கென 1968-ல் உருவாக்கப்பட்டது தமிழ்நாடு பனை வெல்லலம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம். கதர் வாரியத்தின் கீழ் செயல்பட்ட இந்த அமைப்புக்கு மும்பை கதர் ஆணைக் குழு மூலதனக் கடன் வழங்கிவந்தது. இது தவிர, மாவட்ட அளவில் 8 சம்மேளனங்கள், 1,511 கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் 3.5 லட்சம் உறுப்பினர்கள் இணைந்திருந்தனர். ஆனால், அடுத்தடுத்து வந்த அரசுகளின் தவறான கொள்கைகளால் தொடர்ந்து கண்டுகொள்ளப்படாமல் போனதாலும் கூட்டுறவு நிறுவனங்களுக்கே உரிய சீர்கேடுகளாலும் இணையம் சீரழிந்தது. இந்நிலையில், 1996-ல் மூலதனக் கடன் வழங்குவதை நிறுத்தியது மும்பை கதர் ஆணைக் குழு. பல இடங்களில் விற்பனையகங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன.இதனால் பனை மரம் தொழில் பாதிக்கப் பட்டது.இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் இன்னிக்கு பனை மரம் மட்டும் இல்லாமல், அந்த மரம் ஏறும் ஆட்களும் இல்லாமப் போயிட்டாங்க. நிலைமை இப்படியே தொடர்ந்தால், நாளை பனை மரத்தைப் படத்தில் மட்டுமே பார்க்க முடியும்!” நாம் வெள்ளை சக்கரை பயன்படுத்துவதை குறைத்து கொண்டு பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு பயன்படுத்துவதை திகரிக்கலாம்.*”திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்”*-என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி பனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும்.தமிழர்களின் சொத்தான பனைமரத்தை மீட்டெடுக்கும் முயற்சியை நாம் மேற்கொள்ளவேண்டும்.  பனை மரம் தமிழர்களின் அடையாளம்.

Sharing is caring!