வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை…விரையச் செலவு அதிகமாக ஆகிறதே…என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்…

எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்…சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி விஷயத்திற்கு வருவோம்.

வாஸ்து சாஸ்திரமானது ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையை வைத்து, அதற்கான பலன்கள் அமைகிறது என்று கூறுகிறது.

எனவே ஒரு வீட்டில் இருக்கும் கதவுகளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும் இதோ வீட்டுக்கதவு எண்ணிக்கையின் பலன்கள் என்ன?

இரண்டு கதவுகள் – நல்ல பலன்கள் கிடைக்கும். மூன்று கதவுகள் – எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். நான்கு கதவுகள் – நீண்ட ஆயுள் கிடைக்கும்.

ஐந்து கதவுகள் – அடிக்கடி நோய்கள் மூலம் பாதிப்புகள் ஏற்படும் .ஆறு கதவுகள் – புத்திர பாக்கியம் கிடைக்கும். ஏழு கதவுகள் – ஆபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

எட்டு கதவுகள் – வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒன்பது கதவுகள் – நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. பத்து கதவுகள் – பணமும் பொருளும் வீடு தேடி வரும்.

குறிப்பு -மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலன்களும் வீட்டின் சுற்று சுவரில் உள்ள கதவுகளின் எண்ணிக்கைக்கு பொருந்தாது

Sharing is caring!