தமிழ் மக்கள் அதிகம் செறிந்த வாழும் கொழும்பு மாநகரின் வெள்ளவத்தையில் இஸ்லாமியப் பெண்கள் இருவருக்கு புதுவித அனுபவம் கிடைத்துள்ளது. வெள்ளவத்தையிலுள்ள பிரபல தமிழ் ஆடையகம் ஒன்றுக்கு சென்ற இஸ்லாமிய பெண்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவம் கிடைத்துள்ளது.இது தொடர்பில் குறித்த இஸ்லாமிய பெண்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளனர்.வெள்ளவத்தை W.A.சில்வா மாவத்தையிலுள்ள ஆடையகம் ஒன்றுக்கு சென்ற இஸ்லாமிய பெண்கள் நோன்பு திறக்கும் நேரத்தில் அங்கு இருந்துள்ளனர்.நோன்பு திறக்கும் நேரம் வந்துவிட, ஆடையகத்திலுள்ளவர்களிடம் தண்ணீர் கேட்டுள்ளனர்.எனினும், அங்குள்ள ஊழியர்கள் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் குளிர்பானங்களை கொடுத்து நெகிழ வைத்துள்ளனர்.இது குறித்து சமூக வலைத்தளமொன்றில் கருத்து தெரிவித்த இஸ்லாமியப் பெண்கள்…வெள்ளவத்தையிலுள்ள ஒரு கடைக்கு நானும், என் தங்கச்சியும் போய் இருந்தோம். சரியாக நோன்பு திறக்கும் நேரம் வந்து விட்டது அவசரமாக தண்ணீர் கேட்ட பொது, அவங்க கவனித்த முறை இது என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அத்துடன் குறித்த தமிழ் கடைக்காரர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியுடன் நன்றியும் தெரிவித்துள்ளனர்.அண்மைய நாட்களில் நடந்த சம்பவங்களால், இனங்களுக்கு இடையில் இருந்த நல்லுறவு இன்னும் சீர்குலைந்து போய்விடவில்லையென்பதை, குறித்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

Sharing is caring!