எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கு சிறந்த அணியொன்றை உருவாக்குவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த அமரவீர மேலும் கூறியுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தல் இருந்தால், அதில் போட்டியிட ஒரு கூட்டணி அமைக்கப்பட வேண்டும்.

அந்தவகையில் எமது கட்சி தனித்து நின்று போட்டியிட வேண்டுமென்று நினைக்கவில்லை.

கூட்டணி அமைப்பது குறித்து கடந்த வாரம், 18 கட்சிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.

மேலும் எதிர்வரும் தேர்தலில் வெற்றியடைவதற்காக சிறந்த கூட்டணியொன்றை அமைப்பதே எமது நோக்கம்” என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Sharing is caring!