சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள துருக்கியின் ஹடே மாகாணத்தில் வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த குண்டுவெடிப்பு இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, வெடிமருந்து கிடங்கிற்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர்கள் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என துருக்கிய ஊடகமான என்.டி.வி தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் அப்பகுதியில் அவசர மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!